Home

“பாய் உங்க கல்யாணத்துக்கு எல்லாரும் வாழ்த்தினாங்க, ஆனா என்னால உங்கள வாழ்த்த முடியல. நீங்க இஸ்லாம விட்டு ரொம்ப தூரம் போய் கிறிஸ்டியன் முறைப்படி கல்யாணம் பண்ணிகிட்டத என்னால சுத்தமா ஏத்துக்க முடியல. தயவு செஞ்சு இஸ்லாம விட்டு விலகாதீங்க” – இது என் திருமணத்திற்கு வந்த ஒரு வாழ்த்து (!)

Image

சொன்னவர் என்னுடைய கல்லூரி நண்பர்(ஜூனியர் ). இந்த கட்டுரைக்கு போகும் முன் ஒன்றை சொல்லி விடுகின்றேன். பெரும்பாலான என் முஸ்லிம் நண்பர்கள் என்னை வாழ்த்தினர்; என் தந்தையின் நண்பர்கள் உட்பட. எனது இந்தப் பதிவின் நோக்கம் நொள்ளை சொல்லுவது அல்ல.

என் நண்பன் எனது திருமண புகைப்படங்களை முழுவதும் பார்க்கவில்லை. நான் எந்த முறைப்படி திருமணம் செய்தேன் என்று என்னைக் கேட்கவும் இல்லை. முதல் விஷயமாக அவன் கண்ணில் பட்டது என் திருமணம் வழக்கமான இஸ்லாமிய முறைப்படி நடக்கவில்லை என்பதே. அதனால் ஏற்பட்ட வருத்தமே அவனை என்னிடம் அப்படிப் பேச வைத்தது. (அட்லீஸ்ட் இவன் சொல்லவாவது செய்தான். சில நண்பர்கள் மிகக் கவனமாக இந்த திருமண விஷயத்தையே தவிர்த்தார்கள். நான் மணவிலக்கு செய்தால் அல்லது என் மனைவியை மதம் மாற்றினால் முதல் நபராக என்னிடம் வாழ்த்து  சொல்லிப் பேசுவார்கள்).

நான் அவனிடம் எனது நிலையை விளக்கி, குரானில் இருந்து “சூரத்துல் மாய்தா 5:5″ஐ (Surah Al Maidah (The Table Spread)) விளக்கம் குடுத்து (இஸ்லாமியர்கள் கிறித்தவ மற்றும் யூதப் பெண்களை மணமுடிக்கலாம்) எனது திருமணம் எந்த மத முறைப்படியும் இல்லாமல் சிவில் முறைப்படி நடந்ததைச் சொல்லி முடிக்கையில் எனது எண்ணம் அலைபாய தொடங்கியது.

ஒரு மனிதனுக்கு மதம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது, அவன் செயல்களை ஏன் எண்ணங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்து அவனை வேறு எதையும் சிந்திக்க விடாமல் செய்கின்றது என்று இப்படிப் பல. முக்கியமாக இஸ்லாமியர்களைப் பற்றி. (மற்ற மதப் பற்று உள்ளவர்களும் இவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல) மதம் மனிதனை மேம்படுத்த வந்த ஒன்று என்ற வழக்கமான மொக்கை டயலாக்கை விட்டு விட்டு கொஞ்சம் உள்ளே செல்லலாம்.

முதல் விஷயம் குரானைப் பற்றி; அதன் புரிதலைப் பற்றி. எங்கள் ஊரில் குரான் படிப்பதை ஓதுவது என்று சொல்வார்கள். எனக்குத் தெரிந்து இன்று முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பாலானோர் இதை முழுவதும் படித்ததில்லை. இதை தமிழில் படித்து அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவர் மிகக் குறைவே. இஸ்லாமின் அடிப்படை குரான் மற்றும் ஹதீஸ் – இந்த அடிப்படை விஷயத்தைப் பற்றிய அறிவே குறைவாக இருக்கும்பொழுது அதை வைத்து மற்றதைப் பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் ஏராளம். இந்தப் புரிதல் தான் சில தலைவர்களின் (!) தூண்டுதலால் ஒரு திரைப்படம் வெளியாவதுற்கு முன்பே அதனைப் பற்றி தடை கோருவதற்கு தூண்டுகோலாக உள்ளது; இது தான் ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு கொடுக்கும் முத்தத்தை “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்ற காப்சனுடன் அந்த புகைப்படத்தை விமர்சிப்பதற்கு வசதியாக உள்ளது.

Image

இன்றைய முஸ்லிம்களிடம் இதனைப் பற்றி பேசுவதற்கு உண்மையிலேயே பயமாக இருக்கிறது. ஆளுக்கு ஒரு சங்கத்தில் இருக்கிறார்கள். ஏதாவது சொல்லப் போனால் விவாதத்துக்கு வா என்று காமெடி பண்ணுகிறார்கள். என் இந்து நண்பர்களிடம் என்னால் இந்து மதத்தைப் பற்றி விமர்சிக்க முடிகின்றது. அதில் உள்ள நிறை குறைகளை எங்கள் அளவில் எங்களால் உரையாட முடியவும் புரிந்து கொள்ள முடியவும் ஏதுவாக இருக்கின்றது. ஆனால் முஸ்லிம் நண்பர்களிடம் (வெகு சிலரைத் தவிர்த்து) என்னால் சுத்தமாக உரையாட முடியவில்லை. கண்மூடித்தனமான நம்பிக்கை ஆயாசத்தையே தந்து கொண்டு இருக்கிறது.

குரான் ஒரு வேத நூல் மட்டும் அல்ல. அது சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண விழையும் ஒரு தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. ஆனால் 1500 வருடங்களுக்கு முன் உள்ள நடைமுறை இப்பொழுது இல்லை என்ற உண்மையும் இதனுடன் சேர்ந்தே இருக்கிறது. சோ குரானை அதனுடைய வரலாற்றையும் சேர்த்துப் படித்தால் நம்மால் இன்னும் தெளிவாக அதன் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு, சூரத்துல் மாய்தா என்ற அத்தியாயம் முஸ்லிம்களின் கலாச்சார, அரசியல் மற்றும் மத நெறி பற்றியும், முஸ்லிம்களின் admonition பற்றியும், கிறித்தவ மற்றும் யூதர்களின் சரிந்த செல்வாக்கு(அரேபியாவில்) பற்றியும் சொல்கின்றது என்பதை நாம் புரிந்து கொண்டால் அந்த குரான் அத்தியாயத்தை இன்றைய தேதியில் எப்படி அர்த்தப் படுத்திக் கொள்ளலாம் என்பது நமக்குப் புரியும்.

இன்றைய தேதியில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. முதல் விஷயம் சமூக அங்கீகாரம். இன்னும் இந்தியாவில் 30% முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். கல்வி பற்றி சொல்லவே வேண்டாம். இப்பொழுது நிறைய படிக்க ஆரம்பித்து விட்டனர் என்ற வாதத்தையும் நான் முழுவதுமாக ஒத்துக் கொள்ள மாட்டேன். என்ன B.Sc B.COM என்று பேர் தெரியாத கல்லூரியில் படித்து விட்டு gulfக்கு ஓடி விட்டால் ஆச்சா. நான் சொல்வது  அண்ணா மற்றும் NIT போன்ற universityகளை. அதற்குப் போவதற்கு எப்படி தயார் செய்வது போன்று ஏதாவது விவாதம் அல்லது கோச்சிங் ஏதாவது இந்த முஸ்லிம் அமைப்புகள் செய்கின்றதா என்பது கேள்விக்குறியே!

முஸ்லிம்கள் தங்களை இந்த பொது சமூகத்திடம் இருந்து தள்ளியே வைத்துள்ளனர். (தள்ளி வைக்கப் பட்டுள்ளனர் என்பதை நான் சத்தியமாக ஏத்துக் கொள்ள மாட்டேன்) எவ்வளவு insecured feeling. பாபரி மசூதி இடிக்கப் பட்டபோது ஒட்டு மொத்த இந்தியாவே கண்டனக் குரல் கொடுத்தது. இன்றும் சிறுபான்மையினருக்கு ஒன்று என்றால் பெரும்பான்மையினர் உதவி செய்யவே தயாராக உள்ளனர். (சிலவற்றில் விதிவிலக்குகள் இருக்கலாம்). ஆனால் என்றாவது சிறுபான்மையினர் நாட்டின் பொதுப் பிரச்சினைக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனரா? சேது சமுத்திர திட்டத்தையே இந்துக்களின் விஷயம் என்று விட்டவர்கள் தான் அதிகம்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சிவில் சட்டம் மட்டுமே இருக்க முடியும், இருக்க வேண்டும். சில கூமூட்டைகள் இப்பொழுது இங்கு ஷரியா சட்டம் வேண்டும் என்று ஆரம்பித்து விட்டார்கள். முக்கியமாக அந்த கற்பழிப்பு மற்றும் ஆசிட் வீச்சுக்கு அப்புறம். அதை ஒட்டி வரும் ஆன்லைன் போஸ்ட் கள் சலிப்பையே தருகின்றன. இதை சொன்னால் என் மனைவி கற்பழிக்க பட்டபின் இதை சொல் என்கின்றார்கள். இந்திய சட்டம் மட்டும் என்ன கற்பழித்தவன் குஞ்சுக்கு சந்தனமா பூச சொல்கிறது??

Image

சட்டம் இங்கு நடைமுறையில் அவ்வளவு விரைவாக நீதி வழங்கவில்லை என்பது உண்மை தான். ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தான் சிந்திக்க வேண்டுமே ஒழிய, எங்களிடம் இன்னொரு சட்டம் உள்ளது, அது தான் best, இந்த இந்தியா என்பது ஒரு விளங்காத நாடு என்று சொல்வது எந்த விதத்தில் என்று புரியவில்லை. இந்திய நீதித்துறை மற்றும் இந்திய அரசியல் அமைப்பில் நிச்சயம் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். அது இந்திய முறைப்படி இருக்க வேண்டும். இது பொதுப் பிரச்சினை. இதற்கு என்ன தீர்வு என்று எங்கும் விவாதம் நடக்கிறதா என்று தெரியவில்லை.

முஸ்லிம்கள் mainstream அரசியலுக்கு வரும் வரை அவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு இருப்பதாக தெரியவில்லை. நான் சொல்வது அரசியல் விழிப்புணர்வு பற்றி. உலகம் மிகப் பெரியது, அதில் இஸ்லாமும் ஒன்று. இஸ்லாமே உலகம் அல்ல. முதலில் இந்த groupஇல் இருந்து (த மு மு க, முஸ்லிம் லீக் மற்றும் பல) வெளியே வாருங்கள். உலக விஷயத்தை மதம் சார்ந்து மட்டும் அல்லாமல் பொதுவான கண்ணோட்டத்தில் பார்க்க பழகுங்கள். அது கல்வியினால் மட்டுமே முடியும். நான் இங்கு சொல்ல வருவது education  but not academic.

இறுதியாக, இஸ்லாமையும் குரானையும் உங்கள் வாழ்கையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்துங்கள். உங்களுக்காகவும் உங்கள் வாழ்க்கைக்காகவும் தான் வேத நூல்களே  அன்றி அவையே வாழ்க்கை அல்ல என்பது என் கருத்து.

Advertisements

12 thoughts on “Shariya

 1. அடிப்படை புரிதல் என்பது எல்லாருக்கும் குறைவே!! பொது புத்தியில் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இவர்கள் அறிவு ஜீவி போலவும் அவர்கள் அறிவற்றவர் போலவும் தோன்றுவதும் கூட ஒரு வகை எண் கணிதம் மட்டுமே nafy

  இந்த கட்டுரை எங்கோ ஆரம்பித்து எதையோ தொட்டு பின் எங்கோ முடிகிறது இதில் நான் இது தொட்டு சென்ற இடத்தை மட்டும் பேசுகிறேன்

  அந்த படம் வரும் முன்னர் எழுந்த ஆர்ப்பாட்டம் பொது புத்தியில் இவர்களை இவர்களாக தனிமை படுத்தி கொள்வதற்கு ஏற்ப்பட்ட சறுக்கலாக நான் கருதுகிறேன் அதே சமயம் எல்லாரையும் போல இந்த மட்டும் நான் நிறுத்த விரும்ப வில்லை . அதாகவே விட்டுருந்தாலே 10 நாளில் காணாமல் போயி இருக்க வேண்டிய அந்த மொக்க படத்திற்கு இவர்களாக வீண் விளம்பரம் தேடி தந்து விட்டார்களே என்பதுவும் இந்த பதிய பட வேண்டிய ஒன்று

  • உண்மை தான். நான் ஆரம்பித்த சூடு வேறு. ஆனால் சில நேரங்களில் டிப்லோமடிக் ஆக பேசுவதே சிறந்தது. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். நான் பொதுவாக ஷரியத் பற்றி பேச வந்து மற்ற விஷயங்களையும் பேச வேண்டியதாய் போய் விட்டது.

   நான் விஸ்வரூபத்திற்கு முன்பு உள்ள பிரச்சினைகளை மட்டுமே குறிப்பிட்டேன். நீங்கள் சொன்னது 100% சரி. அந்தப் படத்திற்கு தேவை இல்லாத விளம்பரம். அது ஒரு சராசரி மசாலாப் படம் என்ற அளவில் என்னைக் கவர்ந்தது. அதற்கு மேல் ஒன்றும் இல்லை.

   உங்கள் புத்தி ஜீவி விஷயம் உண்மை. எந்த புத்தி ஜீவியும் பொது புத்தியில் உள்ளதை தங்கள் சார்புக்கு ஏற்றது போல் மாற்றிக் கொள்வதில் வல்லவர்கள் 🙂

 2. நல்ல கருத்துப் பதிவு. அழ‌கான‌ சிந்த‌னையைத் தூண்டும் எழுத்துந‌டை. பாராட்டுக்க‌ள் ந‌பீஸ்!

  சில இஸ்லாமிய இயக்கங்கள், தங்கள் ஒரு விஷயம் குறித்த கண்டனத்தைப் பதிவு செய்வதைக் காட்டிலும், அதில் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுடைய‌ த‌னிப்ப‌ட்ட மற்றும் பிரச்சினைக்கு சிறிதும் தொடர்பற்ற‌ விஷய‌ங்களை ஒவ்வாத‌ முறையில் விவாத‌ப்பொருளாக்கிய‌து வ‌ருந்துத‌ற்குரிய‌து.

  நீங்கள் குறிப்பிட்ட “உலகம் மிகப் பெரியது, அதில் இஸ்லாமும் ஒன்று. இஸ்லாமே உலகம் அல்ல” என்ற‌ வாச‌க‌த்தை நான் ம‌றுக்கிறேன். இஸ்லாம் என்ப‌து ம‌த‌ம‌ல்ல. வாழ்விய‌ல் நெறி. இஸ்லாமின் பெயரில் ஒருசில இஸ்லாமியர்கள் செய்யும் விஷயங்கள் வேண்டுமானால் இத்தகைய HALO EFFECT-ஐ (COGNITIVE BIAS)உண்டாக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் உல‌க‌த்தில் ஒரு ம‌னித‌ன் பிற‌ப்பு முத‌ல் இற‌ப்பு வ‌ரை, எவ்வாறு வாழ‌ வேண்டும் என்ப‌தை இஸ்லாம் அழ‌காக‌ கூறுகிற‌து. இஸ்லாமை ம‌த‌மாக‌, த‌னியாக‌ப் பார்த்தால் ம‌ட்டுமே இந்த‌ எண்ண‌ம் தோன்றும். வாழ்க்கையின் நெறியாக‌ இஸ்லாமை நோக்கினால், இவ்வாறு எண்ண‌த் தோன்றாது. இஸ்லாம் என்று நான் கூறுவ‌து இஸ்லாம் வலியுறுத்துகிற க‌ட‌மையான ஐங்க‌ட‌மைக‌ளைத் தாண்டி வாழ்வியலின் ஒவ்வொரு விஷ‌ய‌த்திலும் இஸ்லாம் வ‌லியுறுத்துகிற LOGICAL AND FEASIBLE வழிகளை.

  தாங்கள் குறிப்பிட்ட “குரான் ஒரு வேத நூல் மட்டும் அல்ல. அது சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண விழையும் ஒரு தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. ஆனால் 1500 வருடங்களுக்கு முன் உள்ள நடைமுறை இப்பொழுது இல்லை என்ற உண்மையும் இதனுடன் சேர்ந்தே இருக்கிறது” – இந்த வாசகத்தைப் பற்றியும் நான் குறிப்பிட்டாக வேண்டும்.
  குர்ஆன் 1500 வருடங்களுக்கு முன் அருளப்பட்டது என்று நாம் கூறும் வாய்ப்பை, எந்தவொரு குர்ஆன் வசனமும் நமக்கு வழங்கவில்லை. Quran statements are applicable with logic and discernability regardless of time factor such that it can be adhered to even after “n” number of years! This is the exclusiveness of Quran.

  இப்படிக்கு
  நூருல்லாஹ், அபுதாபி

  • மாம்ஸ்… என்ன நீ வான்னு ஒருமையிலேயே கூப்பிடலாம். ரொம்ப அந்நியமா தெரியுது.

   நான் இங்கு முக்கியமாக குறிப்பிட்டது முஸ்லிம்களைப் பற்றி – இஸ்லாம் பற்றி அல்ல. இஸ்லாம் அதனை ஒரு மதம் என்று கூறுவதை மறுக்கின்றது. இஸ்லாம் பற்றி என்னால் நிறைய எழுத முடியும். உன் கருத்துடன் இங்கு நானும் ஒத்துப் போகிறேன். ஆனால் ஒரு மனிதனுக்கு சாகும் வரை Spoon Feeding செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் இங்கு சொல்ல வந்தது முஸ்லிம்கள் எப்படி இஸ்லாத்தை போட்டு தாக்குகிறார்கள் என்பது.

   அடுத்த விஷயம் – நான் குரான் என்ற புத்தகம் இருந்து வரும் மொத்த வருடங்களைப் பற்றி. இது டோரஹ்வில் ஆரம்பித்த விஷயம். ஏன் முன்னேயே அடம் இல் இருந்து ஆரம்பித்த விஷயம். இதை யூத, கிறித்தவ மதங்களும் சொல்கின்றன. நான் அந்த topic க்கு போகவே இல்லை. நான் சொல்ல வந்தது குரான் இருந்த கால கட்டத்தைப் பற்றி. உதாரணத்திற்கு, குரான் சொன்ன அடிமைகள் விடுவிப்பு என்ற விஷயம் இப்பொழுது இல்லை-இது போன்று. இன்னும் தெளிவாக நான் communicate பண்ணி இருக்க வேண்டும். அடுத்தடுத்த பதிவுகளில் திருத்திக் கொள்ளலாம். 🙂 (of course in another topic)

 3. Good one nafees…I got to accept one point – discussing the shortfalls or critiques of islam with muslims. Mission impossible. Being an atheist I have had many discussions(!) with christians (and hindus)..though it a pointless exercise,but the fact is after the discussion I kinda of understand the christian psyche and why they do what they do.But with muslims I never get a chance to understand them bcoz most if not all are not open to discussion of their faith with outsiders…and if someone dares to raise questions/doubts which are critical about Koran or Prophet they are termed blasphemers and ..and then you know what happens 🙂

  And about not understanding holy books..if you see bible or koran or the vedas are literary masterpieces with many parts left for open interpretation of the reader, and everyone sees their own metaphors/meanings in them and thinks their understanding is the best and superior…worst case in some places majority don’t understand the literature and depend on religious heads for interpretation..and again you know what happens 🙂

  Some statistics. In tamilnadu,muslims make 6-7% of the population, their representation in state assembly is 2.5%..and the so much pro-minority CM has just 1 muslim minister in her cabinet…2 MPs out of 39. Instead of banning movies,wish someone works to rectify the above.

  • உண்மை வினோத். இங்கு பேச்சுக்கே வேலை இல்லை. உடனேயே விவாதம் தான்:) இனி வரும் காலங்களில் இந்த நிலை மாறும் என்று நம்புவோம். எந்த விஷயத்துக்கும் அதீத மரியாதை கொடுப்பது நம்மை அதில் இருந்து விலக்கிவிடும். வேத புத்தகங்கள் எடுத்துப் படிப்பதற்கே அன்றி பூஜிப்பதற்கு அல்ல என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

   second point .. hit the spot … இந்த கண்ணோட்டம் என்ற விஷயம் மிக முக்கியம். இதைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். ஆனால் ஒரு மதத்தினர் அவர்தம் வேத நூலையே படிக்காத போது கம்பாரடிவ் ஸ்டடி என்றால் எங்கு போகும் என்பதும் கேள்விக்குறியே. இந்த குருமார்கள் எப்பொழுதுமே ஆபத்தானவர்கள். twist people i say

   As an atheist i am completely agree with you…இப்படி atheist ன்னு சொன்னதுக்கே எனக்கு பத்வா குடுக்கலாம் என்று ஒரு குரு கிளப்பி விடலாம். அதற்கு குரானையும் ஆதாரமாக காண்பிக்கலாம்.but the context is important to understand that text. It even mentioned that the god will punish me in the judgement day.. perception again.. thanks a lot to bring lot of valuable points:)

 4. Excellent post Nafees..As always,neatly written and Daringly said some truths.what I felt was,here,we are able to comment even on prime minister or CM but not on head of any community. recently,a muslim community leader spoke very wrong about kamal and his daughter( Even you mentioned that only diplomatically,not straight) but no one dared to put case or talk much about it.. Then,where are we going? we ll lose freedom of speech soon if we start fearing on community leaders..

  • நன்றி தினேஷ். நான் அந்த நிகழ்வை மைல்டாக தொட்டுச் சென்றது உண்மை. ஏன் என்றால் கோவம். ஒரு தந்தை தன் மகளுக்கு முத்தம் இடுவதை கூட காமக் கண்ணோடு பார்க்கும் மூடர்களைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பாததால் அப்படியே விட்டு விட்டேன்.

   இவங்க பின்னாடி ஒரு கூட்டம் சேந்துடுச்சுனு இப்படி எல்லாம் பேசுறாங்க. ஹ்ம்ம்… இந்த நிலையும் விரைவில் மாறும்.

 5. very good job nafees.. right usage of words and thought flow, this is first time i red ur blog honestly, u really impressed me da. gud one.

  • நன்றி அனானிமஸ். நீங்கள் யார் என்று தான் தெரியவில்லை 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s