Home

இமயம் 4 – Inner Line Permits

மற்ற விஷயத்தைப் பார்க்கும் முன், இந்த அனுமதி விஷயத்தை பற்றி பேசலாம். எதற்காக முதலில் இந்த permit? இந்திய நாட்டின் எல்லைகளாக உள்ள ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம், அருணாசல் பிரதேசம் மற்றும் பல மாநிலங்களில் இந்த permit இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. இதுவும் குறிப்பிட்ட நாள் வரை தான். உதாரணமாக 14 நாட்கள் நீங்கள் விண்ணப்பிக்கலாம். இதை அந்தந்த மாநிலங்களில் உள்ள local registrar அலுவலகத்திலேயே விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம்.

இந்த அனுமதி எல்லா இடங்களுக்கும் அல்ல. சர்வதேச எல்லைகளுக்கு அருகில் இருக்கும் பகுதிகளுக்குச் செல்வதற்கு மட்டுமே இது. மற்றபடி நீங்கள் எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் எந்த மாநிலத்திலும் தங்கிக் கொள்ளலாம். (ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் எந்த இடத்தையும் விலைக்கு வாங்க முடியாது. Article 370 தான் காரணம்) அதனால் நிறைய பஞ்சாபிகள் இங்கு பினாமி பேரில் கட்டிடம் வைத்துள்ளனர்.

லடாக்கை எடுத்துக் கொள்வோம். இங்கு pangong, நுப்ரா, கார்டுங் லா, சோமோரீரி ஆகிய இடங்களுக்கு இந்த inner line permit தேவைப்படுகிறது. (இதிலும் சாங்தாங் பள்ளத்தாக்கு ஒரு வித்தியாசமான ஒன்று. லடாக் பகுதியில் பார்க்கலாம்) இதை நீங்கள் DC அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். ஒரு ஆளுக்கு 15ரூ ஆக இருந்த permit சென்ற ஆண்டு முதல் 220 ரூ ஆக உயர்த்தப்பட்டது. வெளிநாட்டவர்க்கு 100ரூ யில் இருந்து 400 ரூ வாக மாற்றப்பட்டது. (இதை environment fee என்று சொல்லிவிட்டார்கள்).

இந்தியனாக இந்த பெர்மிட் வாங்குவதில் எந்த கெடுபிடியும் இல்லை. 300ரூ கொடுத்தால் ஒரு travel agent உங்களுக்கு இதை ஏற்பாடு செய்து கொடுப்பார். ஆனால் வெளிநாட்டினருக்கு தனி ஒரு ஆளாக அனுமதி இல்லை. குறைந்தது 4 பேராக விண்ணப்பிக்க வேண்டும் – அந்த 4 பேரில் 3 பேர் இந்தியர்கள் என்றாலும் ஓகே. ஒரு முறை இதை வாங்கி விட்டால் அந்த வெளிநாட்டினர் தனியாகக் கூட பயணம் செய்யலாம். செம்ம லாஜிக்.

இது தான் அந்த பெர்மிட். ஆனால் ஒன்று. கார்கிலில் உள்ள புதாகர்ப் பகுதியில் உள்ள சில கிராமங்கள், சியாச்சின் மற்றும் காஷ்மீர் பகுதியில் உள்ள (சியாச்சினும் காஷ்மீர் தான்) பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சில இடங்களுக்கும் உயர் இடத்தில் தொடர்பு இருந்தால் மட்டுமே செல்ல முடியும். 4 அல்லது 3 வருடம் முன்பு சியாச்சின் சென்று வந்த ட்ரெகிங்க் குழு பற்றி நினைவு கொள்ளவும். இது போன்று ஏதேனும் organize செய்தாலும் அங்கே சென்று வர சாத்தியம் உண்டு. மற்றபடி இமயத்தில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். முக்கியமாக zanskar க்கு (இப்பொழுது அதன் பேரை Zaskar என்று மாற்றி விட்டார்கள்).

1

மேலே உள்ள படம் நான் உத்திரகான்ட் மாநிலத்தில் 30 நாட்கள் சுற்றித் திரிந்த போது ரிஷிகேஷில் எடுக்கப்பட்ட புகைப்படம். எனக்கு மிகவும் பிடித்தமான எனது புகைப்படங்களில் ஒன்று. ஒரிஜினல் இந்தியாவில் உள்ளதால் இங்கு பகிரப்படும் எனது அனைத்துப் படங்களும் compress செய்யப்பட்டவைகளே. இந்த சிலை ரீப்லேஸ் செய்யப்பட்டு இதை விடப் பெரிதாக வைக்கப்பட்டது. அந்த சிலை தான் வெள்ளத்தின் போது படம் பிடிக்கப்பட்டது.

DSC04132

ரிஷிகேஷில் இருக்கும் போது பெரும்பாலும் இங்கு நடக்கும் 6 மணி (மாலை) பஜனைக்கு சென்று விடுவேன். மொழி புரியாவிட்டாலும் பாடல் கேட்க அவ்வளவு சுகமாக இருக்கும். ஒரு முறை இங்கும் ஹரிதுவரிலும் இரவு கோவிலிலேயே தங்கி அடுத்த நாள் உண்டகட்டி வாங்கி சாப்பிட்ட அனுபவமும் உண்டு. என்னுடன் France நாட்டைச் சேர்ந்த நண்பரும் தங்கி இருந்தார். பிச்சைக்காரர்களோடு தங்கி இருந்த அந்த அனுபவம் (ஹரித்வாரில்) என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.

DSC04133

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s