Home
இமயம் – 1

ஐரோப்பா கண்டம் மிக அழகானது. ஐரோப்பியர்கள் சிறிது கர்வதுடனேயே தமது கண்டம் குறித்து நடந்து கொள்வர். எனது நண்பர் ஒருவர் – க்ரீஸ் நாட்டை சேர்ந்தவர் – இமயமலைப் புகைப்படங்களை பார்த்து விட்டு என்னிடம் சொன்னது: ” உனது இந்த புகைப்படங்களை பார்த்திராவிட்டால் எனது நாட்டை விட அழகான இடம் இந்த உலகத்தில் உள்ளது என்று நம்பி இருக்க மாட்டேன்”.

உள்ளே செல்லுமுன் ஒரு சின்ன disclaimer. இங்கு நான் சொல்லப் போகும் அனைத்தும் என் சொந்த அனுபவத்தினால் மட்டுமே ஏற்பட்டவை. எந்த இடத்திலும் நான் exaggeration செய்து சொல்லப் போவது இல்லை. 2300+ கிமீ உள்ள இமயமலையில் இலக்கே இல்லாமல் நான் சுற்றித் திரிந்தது குறைந்தபட்சம் 1500+ கிமீயாவது இருக்கும். இந்தியா, நேபாளம், பூடான் மற்றும் திபெத் என்று மலை ஏறியது என் வாழ்க்கை அர்த்தமுள்ளது என்று சொல்வதற்கு போதுமானது.

எத்தனை விதமான மனிதர்கள், அவர்களின் அப்பழுக்கில்லாத அன்பு, மலைகளுக்கு மட்டும் உள்ள விஷேஷ இயல்புகள், பயணத்தின் வாயிலாக அறிந்த நண்பர்கள், இமயம் கண்டு அழுது நிமிடங்கள் என்று இன்று வரை நான் பார்த்ததை, உணர்ந்ததை முடிந்தவரை அப்படியே குடுக்க முயற்சிக்கிறேன். இது ஒரு இலக்கிய பயணத் தொடர் இல்லை. எனக்கு இலக்கியம் எழுதத் தெரியாது – வெறும் வாசகன் மட்டுமே. பிழைகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்.

இங்கு எதையும் ஒரு order இல் எழுதப் போவது இல்லை; அதற்கு தேவையும் இல்லை. லடாக், ஸ்பிடி, கைலாஷ், மனஸ், கேதார்நாத், ஸ்ரீநகர், கார்கில், ட்ராஸ், சிம்லா, மனாலி, தபு, காஸா, கீ, சாடர் ட்ரெக், ஸான்ஸ்கர் என்று பைத்தியமாக இந்தியாவில் சுற்றி அலைந்தது மட்டுமின்றி, திம்பு, பாரோ, பூம்தாங் என்று பூட்டானில் குளிர் காலத்தில் உலவிய நாட்கள் என்றும் பசுமையானவை.

ஒரு படத்துடன் எனது இந்த பயண அனுபவங்களை ஆரம்பிக்கிறேன். கேள்விகள் எதுவாயினும் கேளுங்கள்.

இது ஆசியாவின் உயர்ந்த கிராமம் – கிப்‌பர். 4220m ASL. ஸ்பிடி பள்ளத்தாக்கில் உள்ளது.
இங்கு கழித்த நாட்கள் மூன்று பகல் இரண்டு இரவு.
அறை வாடகை – 150ரூ.
அருகில் உள்ள பெருநகரம் – காசா.

1

ஒரு விஷயம். என்னைப் பொருத்தவரை என் விருப்பங்களை இவ்வாறு பட்டியல் இடலாம்.
1. பயணம்
2. சினிமா
3. புத்தகம்
4. இசை

இதில் பயணத்துடன் வருவது புத்தகமும் இசையும். ஒவ்வொரு முறையும் வித விதமான இசையுடன் செல்வேன். mozart, ludwig மற்றும் பாக் இல் இருந்து, பல்வேறு வகைப்பட்ட ஐரோப்பிய வாத்திய கருவிகளின் இசை வரை. இமயத்தில் சும்மா எதுவுமே செய்யாமல், வெறும் மலைகளைப் பார்த்துக்கொண்டே புத்தகம் படிப்பது மற்றும் இசை கேட்பது என்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. ஒரு முறை எடுத்து சென்ற இசைக் கோர்வையை அடுத்த முறை எடுத்து செல்வது இல்லை. ஒரே ஒரு விதிவிலக்கு.

பெரும்பாலும் நான் தனியாகவே பயணம் செல்வேன். முக்கியமாக நான் avoid செய்வது என் கூடவே இருக்கும் நண்பர்களை. நண்பர்களுடன் சேர்ந்து டாப்ஸ்லிப், ஊட்டி மற்றும் சில இடங்களுக்கு சென்றிருந்தாலும், எனது பயணத்தின் பெரும்பான்மை என்பது solo travel. அப்படி செய்யும் போது கிடைத்த நண்பர்கள் இன்னும் நண்பர்களாகவே தொடர்கிறார்கள்.

இயற்கைக்கு முன் நாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் இமயத்தை பார்க்கும் போது நிச்சயம் ஏற்படும். ஒரு முறை நான் குர்சோன் புகியாலில் (உத்திராகன்ட்) trek செய்து கொண்டு இருந்தேன். ஏதோ ஒன்று தோன்றவே, நடப்பதை நிறுத்தி விட்டு திரும்பிப் பார்த்தேன். சத்தியமாக மூச்சு விட மறந்தேன். Breathtaking என்ற வார்த்தைக்கான அர்த்தம் அன்று உண்மையிலேயே புரிந்தது. இந்தியாவின் 4வது உயரமான சிகரம் “நந்தா தேவி”யின் தோற்றம் தான் அது.

இதோ அந்த புகைப்படம். இங்கே நான் trekking நிறுத்தி விட்டு அப்படியே 2 மணி நேரம் ஒன்றும் செய்யாமல் அந்த விதிவிலக்கான இசையை கேட்க ஆரம்பித்தேன். அது, எந்த இசைக் கோர்வை மாறினாலும், என் playlist இல் மாறாத, எப்பொழுதும் என் கூடவே வரும் இளையராஜாவின் இசை. அந்த நிமிட அனுபவம் பற்றி ஒரு வார்த்தை – சொர்க்கம்.

2

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s