Home

இமயம் 5

கீ – கிப்பர்

புத்த மதத்தில் இருப்பவர்களுக்கு பூனை எப்பொழுதுமே பிடித்தமான ஒன்று. இறந்தவரின் ஆத்மா சொர்க்கம் செல்லுமுன் பூனையின் உடம்பில் சிறிது காலம் இருக்கும் என்பது ஐதீகம் என்று சொன்னார் பிட்சு. அவரது பூனை அவர் தியானம் செய்யும் போது மட்டும் வரவில்லை; மாறாக எந்நேரமும் அவருடனே இருந்தது.
இமயத்தில் உள்ள உணவு வகை ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபட்டாலும் சில பொதுவான உணவு உண்டு. அதில் ஒன்று தான் வெண்ணை தேநீர் (Butter Tea). இதை லடாக்கில் ‘கூர் கூர்’ என்று சொல்வார்கள். இது தேயிலை, உப்பு மற்றும் Yak கில் (இமயமலையில் உள்ள எருது) இருந்து செய்யப்பட்ட வெண்ணை ஆகிய மூன்றும் கலந்தது. இதில் Rum சேர்த்தும் தருவார்கள். ஒருமுறை நான் சென்ற Chadar ட்ரெக்கில் (உறைந்த Zanskar ஆற்றின் மேல் செல்லும் ட்ரெக். இதில் 21 நாட்கள் சென்று இருந்தேன். இங்கு தான் முதன் முதலில் எனக்கு ஃப்ராஸ்ட் பைட் என்பதின் அர்த்தம் புரிந்தது. மீதி விபரம் Zanskar பகுதியில்) இது தான் பெரும்பான்மையினரின் விருப்பமாக இருந்தது.

இமயத்தில் உள்ள கோம்ப்பாக்கள் வெறும் மத சம்பந்தமான கேந்திரயம் மட்டும் அல்ல. அதுவே அது அமைந்துள்ள ஊரின் Adminstration தலைமையும் ஆகும். பூட்டானில் உள்ள Punakha மிகச் சரியான ஒரு உதாரணம். அவை அந்த கிராமம் அல்லது சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களின் ((நமது 18 பட்டியை நினைவு கொள்க) வரவு செலவு, விவசாயம், மற்றும் மக்களின் அனைத்து வகை தேவைகளையும் பூர்த்தி செய்யும் இடமாகவும் உள்ளது.

இங்கு கீ மற்றும் கிப்பேரின் கேந்திர நிலையம் தான் இந்த கீ கோம்ப்பா. நான் சென்றது கோடையில் என்பதால் அறுவடை முடித்து அனைத்தும் ஏற்றுமதிக்கு தயார் நிலையில் இருந்தது. பிட்சு குடுத்த பட்டர் டீயுடன் வயலுக்குச் சென்றேன். டிராக்டர் ஒன்று ஓட்ட வாய்ப்பு கிடைத்தது. கீழே வயலில் இருந்து கீயைப் பார்ப்பதற்க்கு ஒரு கோட்டை போலவே இருந்தது. உள்ளே சென்றால் அதன் 3 அடுக்குகளும் maze போலவே கட்டப்பட்டு இருந்தது. கவனமாக இல்லாவிட்டால் தொலைந்து விடுவது திண்ணம்.
கீ – கிப்பர் சாலையின் வழியே 8 கிமீ. ஒரு நாளுக்கு இருமுறை செல்லும் பேருந்திலோ அல்லது லிஃப்ட் கேட்டோ செல்லலாம். கீ கோம்ப்பாவில் தங்குமிடம் வாடகை அதிகமாக இருந்ததினால் மலை மேல் இருந்த ஒரு கிராமத்தில் தங்கலாம் என்று முடிவு செய்து காலையில் கிளம்பினேன். ஏற ஏற மலை ஏறிக்கொண்டு இருந்ததே அன்றி உச்சி வந்த பாடு இல்லை. ஆனால் அந்த இடத்தில் இருந்து கீயை பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வுக்காக இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் ஏறலாம் போல் இருந்தது (படம் கீழே).

வாழ்க்கையில் எங்கும் படிக்காத பாடத்தை நம் அனுபவம் நமக்கு சொல்லித் தரும் என்பதை நான் இமயத்தில் பலமுறை உணர்ந்து இருக்கிறேன். ட்ரெக் செய்து மேலே (4100 m ASL) வந்த உடன் என் கண்ணில் பட்ட முதல் காட்சி ஸ்பீடி summit. என் மிக அருகில், மிக மிக அருகில் பனியால் சூழப்பட்ட மலை இருந்தது. 6 மணி நேரத்தில் என்னால் Summit செய்யக் கூடிய மலை தான். ஆனால் அதற்கு எதிரில் இருந்த இன்னொரு கிராமம் (குக்கிராமம்) என்னை ஈர்த்ததால் அங்கு சென்றேன்.

எனக்கு ஹிந்தி தெரியாது; ஹிமாச்சளியும் புரியாது. அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது; ஹிந்தியும் என் அளவுதான். ஆனால் எங்கள் தகவல் தொடர்பில் தொய்வில்லை. ஒரு கட்டத்தில் நான் தமிழில் பேச ஆரம்பித்து விட்டேன். எதுவும் எங்களை தடுக்கவில்லை. அன்று இரவு அவர்கள் இடத்திலேயே தங்கி விடுவது என்ற உடன்பாட்டிற்கு எப்படியோ வந்து விட்டோம். என் தலைவலி தீர சிறிது டீ குடித்துவிட்டு (விவசாயிகள் இதற்கு பணம் வாங்கவில்லை) கிளம்பினேன். இரவு தங்குவதற்கும் பணம் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். இருந்தாலும் நான் 100 ரூ குடுத்தேன். நான் தங்கி இருந்த வீட்டுப் படம் கீழே.

கீ – கிப்பர் பகுதியின் முடிவுரை மற்றும் சில இதர சுவாரசிய விஷயங்களை அடுத்த பதிவில் பதிகிறேன்.

Trekking Path from my place
1

தங்கி இருந்த விவசாயிகளின் வீடு – நாள் வாடகை 100 ரூ
2

கீ ஆலயம் – உயரே இருந்து
3

விவசாயிகளுடன்
4

கீ ஆலயம் மற்றும் ஸ்பிடி ஆறு/பள்ளத்தாக்கு
5

குளிர் காலங்களில் பாதிக்கும் மேல் ஷிம்லா, டெல்லி என்று வந்து விடுவர். ஸ்பிடியில் பிரச்சினை இல்லை. வருடம் முழுவதும் பேருந்து உண்டு. லடாக் மற்றும் Zanskar இல் தான் பிரச்சினை. அதற்காகத் தான் சடார் ட்ரெக் வந்தது. சில இடங்களுக்கு வெறும் கால்நடை தான். கண்டிப்பாக இது பற்றி Zanskar பகுதியில் சொல்கிறேன். அங்கு இன்னும் பொருத்தமாக இருக்கும். நான் lingshed வழியாக படும் சென்றேன். (Chadar Trek) லிங்க்ஷெட் இல் உள்ளது 70 குடும்பங்கள் மட்டுமே. அவர்களுக்கு உணவு மற்றும் எரிபொருள் எடுத்துச் செல்ல லெஹ் வருவார்கள். சாலை முழுவதும் பனி மூடி இருப்பதால் உறைந்த ஆற்றின் மேல் நடப்பது தான் ஒரே வழி. அவர்களில் சிலர் தான் நமக்கு guide ஆக இருப்பர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s